“அடேய் என்னடா பண்ணி வச்சிருக்கீங்க..?!” நீதிபதி படத்துக்கே மாந்திரீகமா..? நள்ளிரவு மயானத்தில் நடந்த பயங்கர கூத்து.. போலீசாரையே அலறவைத்த வாக்குமூலம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“அடேய் என்னடா பண்ணி வச்சிருக்கீங்க..?!” நீதிபதி படத்துக்கே மாந்திரீகமா..? நள்ளிரவு மயானத்தில் நடந்த பயங்கர கூத்து.. போலீசாரையே அலறவைத்த வாக்குமூலம்..!!

Published

on

சத்தீஸ்கர் மாநிலத்தில் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ரமேஷ் சின்ஹாவின் புகைப்படத்தைப் பயன்படுத்தி, வழக்கின் பெயில் பெறத் தாந்திரீக பூஜை செய்யப்பட்ட விசித்திரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நபர் ஒருவர் தனது உறவினருக்கு நீதிமன்றத்தில் உடனடியாக ஜாமீன் கிடைக்க வேண்டும் என்பதற்காக, உயர் நீதிமன்ற நீதிபதியின் படத்தை வைத்து எலுமிச்சம்பழம், குங்குமம் மற்றும் மீன் உள்ளிட்ட பொருட்களைப் பயன்படுத்தி இந்தத் தாந்திரீகப் பூஜையை நடத்தியுள்ளார். மூடநம்பிக்கையின் உச்சகட்டமாக அரங்கேறிய இந்தச் செயல் குறித்துத் தகவல் அறிந்ததும், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்று விசாரணையை மேற்கொண்டனர்.

காவல்துறையினரின் விசாரணையில், சமூக வலைதளத்தில் உள்ள ஒரு வீடியோவைப் பார்த்து, அதில் கூறியபடி நீதிபதியின் புகைப்படத்திற்குத் தாந்திரீக பூஜை செய்தால் கண்டிப்பாக ஜாமீன் கிடைக்கும் என நம்பி இதைச் செய்ததாக அந்த நபர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், இதுபோன்ற மூடநம்பிக்கைகளை நம்ப வேண்டாம் என்றும், சட்டப்பூர்வமாக நீதிமன்ற நடவடிக்கை மூலமே ஜாமீன் பெற முடியும் என்றும் அவருக்குக் கடுமையாக அறிவுரை வழங்கி எச்சரித்து அனுப்பி வைத்தனர். நீதிபதியின் படத்துக்கே தாந்திரீக பூஜை செய்யப்பட்ட இந்தச் சம்பவம் சோஷியல் மீடியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in