LATEST NEWS
அடக் கொடுமையே… பிஞ்சுகளைக் குறிவைத்து வீசிய மரண வலை..! அடுத்தடுத்து பரிதாபமாகத் துடிதுடித்துப் போன உயிர்கள்… நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்..!!
உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டம், போஜியா கிராமத்தைச் சேர்ந்த சானியா என்ற 7 வயது சிறுமி, மாலையில் தனது வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த ஒரு சிறுத்தை, சிறுமியைத் திடீரெனத் தாக்கி அருகில் உள்ள கரும்பு வயலுக்குள் இழுத்துச் சென்றது. சிறுமியின் தந்தையும் கிராம மக்களும் சிறுத்தையை விரட்டிச் சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினரும் தீவிரத் தேடுதலில் ஈடுபட்ட நிலையில், மறுநாள் காலையில் வயலில் அச்சிறுமியின் உடல் சிதைந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது.
இதேபோன்று, உத்தர பிரதேசத்தின் பரைச் மாவட்டம், பதையா கிராமத்தில் ரோஹித் என்ற 7 வயது சிறுவன், தனது வீட்டருகே உள்ள வயல்வெளிப் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தான். அப்போது அங்கே மறைந்திருந்த மற்றொரு சிறுத்தை, சிறுவன் மீது பாய்ந்து கொடூரமாகத் தாக்கியது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த குடும்பத்தினர் பார்ப்பதற்குள், சிறுத்தை அவனை வயலுக்குள் இழுத்துச் சென்றது.
உடனடியாக கிராம மக்கள் மற்றும் குடும்பத்தினர் தீவிரமாகத் தேடி, படுகாயமடைந்த நிலையிலிருந்த சிறுவனை மீட்ட போதிலும், அவன் பரிதாபமாக உயிரிழந்தான். அடுத்தடுத்து ஒரே மாநிலத்தில் சிறுத்தை தாக்கி இரு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்த இந்தச் சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
