“பக்தர்களுக்குப் பெரும் நிம்மதி..! கோவில்களுக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி..” ஆனால் இந்த ஒரு கண்டிஷன் மஸ்ட்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பக்தர்களுக்குப் பெரும் நிம்மதி..! கோவில்களுக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி..” ஆனால் இந்த ஒரு கண்டிஷன் மஸ்ட்..!!

Published

on

பழனி தண்டாயுதபாணிசுவாமி கோவில், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவில், மதுரை அழகர் கோவில் உள்ளிட்ட 52 கோவில்களில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்தது. கடந்த செப்டம்பர் 1-ந் தேதி முதல் இந்த தடை உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டது.

அதன்படி, மேற்படி கோவில்களின் வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் செல்போனை கொடுத்துவிட்டு பக்தர்கள் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்துவந்தனர். இதனால், செல்போனை பெட்டகத்தில் வைப்பதற்கு ஒரு முறையும், சாமி தரிசனம் செய்து முடித்துவிட்டு மீண்டும் செல்போனை பெறுவதற்கு ஒரு முறையும் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்ததால் பல்வேறு நெருக்கடிக்கு உள்ளாகினர். இதனால், செல்போன் தடை விதிக்கப்பட்ட கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். மேலும், செல்போனை பாதுகாப்பு பெட்டகத்தில் வைப்பதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்களை உணர்ந்த இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் இதுகுறித்து ஆலோசித்து வந்தனர்.

Advertisement

இந்த நிலையில், பக்தர்களின் வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை தற்போது இதில் தளர்வுகளை அறிவித்துள்ளது. புதிய தளர்வுகளின்படி பக்தர்கள் இனி தங்களின் செல்போன்களை கோவிலுக்குள் எடுத்துச் செல்லலாம். ஆனால், செல்போன்களை ‘சுவிட்ச் ஆப்’ செய்து எடுத்து செல்ல வேண்டும். கோவில்களுக்குள் செல்போனை கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டு இருந்தாலும், சிலைகள், பூஜைகளை போட்டோ, வீடியோ எடுப்பது, செல்பி மற்றும் சமூக வலைத்தள பதிவுகளை எடுக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது. மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை எச்சரித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in