LATEST NEWS
“அவர் என்ன கடவுளின் குழந்தையா?” இதனால தான் உங்கள தற்குறின்னு சொல்றோம்.. சும்மாவா சொல்றோம்… அமைச்சர் ஸ்ரீநாத்தை வறுத்தெடுத்த சீமான்.. !!
காவிரி உரிமை மீட்புப் போராட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்தின் அரசியல் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார். “அவர் கடவுளின் குழந்தையா? தற்குறிகள் என்று நாங்கள் ஏதோ போற போக்கில் பேசவில்லை, நீங்கள் இப்படியெல்லாம் பேசுவதால் தான் சொல்கிறோம்” என்று சாடியுள்ளார். ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற பேச்சுகளால்தான் தாங்கள் இத்தகைய விமர்சனங்களை முன்வைக்க வேண்டியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தூத்துக்குடி துறைமுக விரிவாக்கம் குறித்து திருச்செந்தூரில் வைத்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “நான் இப்போது திருச்செந்தூரில் இருக்கிறேன், இந்த கேள்வியை தூத்துக்குடிக்கு வந்து கேளுங்கள்” என்று அமைச்சர் ஸ்ரீநாத் பதிலளித்ததற்குச் சீமான் நறுக் கேள்வி எழுப்பியுள்ளார். திருச்செந்தூர் என்பதும் தூத்துக்குடி மாவட்டத்திற்குள் தான் அமைந்திருக்கிறது என்ற எளிய புவியியல் அறிவு கூட அமைச்சருக்கு இல்லையா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அமைச்சர்களின் இத்தகைய பொறுப்பற்ற பதில்கள் அவர்களின் அரசியல் முதிர்ச்சியின்மையைக் காட்டுவதாகச் சீமான் சாடியுள்ளார.
மேலும், “நீங்கள் தூத்துக்குடிக்கு மட்டும் அமைச்சரா இல்லை தமிழ்நாட்டின் அமைச்சரா?” என்று கேள்வி எழுப்பியுள்ள சீமான், ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் பொறுப்பான ஒரு அமைச்சர் இவ்வாறு பிராந்திய ரீதியாகப் பிரித்துப் பேசித் தப்பிக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார். தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் துறை சார்ந்த கேள்விகளுக்கும் முறையான புள்ளிவிவரங்களுடன் பொறுப்பான பதில்களை வழங்க வேண்டும் என்றும் அவர் தனது உரையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
