LATEST NEWS
“அடேங்கப்பா… என்ன ஒரு மாஸ்டர் மைன்ட்..!” ரயிலில் கதறி அழுத பேரன்.. உடனே ஒரே ஒரு துண்டை வச்சுத் தாத்தா செய்த அதிசயம் … அசந்துபோன சக பயணிகள்.. இணையத்தை ஆக்கிரமித்த கியூட் வீடியோ..!!
குடும்பத்தினருடன் ரயிலில் பயணம் செய்த சிறுவன் ஒருவன், ரயில் மெதுவாகச் சென்றபோது தண்டவாளத்திற்கு அருகில் இருந்த மரத்தில் சிலர் கயிறு கட்டி ஊஞ்சல் ஆடுவதைப் பார்த்துள்ளான். அதைப் பார்த்ததும் தானும் உடனடியாக அதேபோல ஊஞ்சல் ஆட வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து அழத் தொடங்கியுள்ளான். அவனது விடாப்பிடியான அழுகை ரயிலில் பயணம் செய்த சக பயணிகளுக்கும் பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியது.
This child was traveling by train with his family. On the way, the train slowed down at one point, and near the railway tracks, some children were swinging on rope swings tied to trees in a nearby field.
After seeing them, this child also wanted to swing just like them and… pic.twitter.com/xnFRsB3RBS— Saffron Chargers (@SaffronChargers) August 7, 2026
தன் பேரனின் அழுகையைக் கண்டு தாங்க முடியாத தாத்தா, உடனடியாக ஒரு சாதுரியமான யோசனையைச் செயல்படுத்தினார். தான் வைத்திருந்த துண்டை ரயிலின் இருக்கையில் இணைக்கப்பட்டிருந்த சங்கிலியில் கட்டி, ஒரு தற்காலிக ஊஞ்சலைச் செய்தார். அதில் தன் பேரனை அமர வைத்து மெதுவாக ஆட்டிவிட்டதும், அந்தச் சிறுவன் அழுகையை நிறுத்திவிட்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் ஊஞ்சல் ஆடத் தொடங்கினான். தாத்தாவின் இந்தச் சமயோசிதமான யோசனை, ரயிலில் இருந்த அனைவரையும் நெகிழ வைத்தது. இந்த நெகிழ்ச்சி வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
