நெஞ்சை உலுக்கும் கொடூரம்..! சொந்த தந்தையின் இதயத்தைக் கிழித்தெடுத்து உடலின் மேல் வைத்து.. சைக்கோ மகள் செய்த கொடூரம்.. அமெரிக்காவில் அரங்கேறிய பகீர் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நெஞ்சை உலுக்கும் கொடூரம்..! சொந்த தந்தையின் இதயத்தைக் கிழித்தெடுத்து உடலின் மேல் வைத்து.. சைக்கோ மகள் செய்த கொடூரம்.. அமெரிக்காவில் அரங்கேறிய பகீர் சம்பவம்..!!

Published

on

அமெரிக்காவில் சொந்த மகளே தனது தந்தையைக் கொடூரமாகக் கொலை செய்து, அவரது இதயத்தைக் கிழித்தெடுத்து உடலின் மேல் வைத்துவிட்டுச் சென்ற அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இக்கொடூரக் கொலையைச் செய்த அமெரிக்கப் பெண்ணைக் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து தீவிர விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். விசாரணையின் போது, “எனது அப்பாவிற்குப் பெரிதாக ஒன்றும் காயம் ஏற்படவில்லை” என்று அந்தப் பெண் அலட்சியமாகக் கூறியுள்ளது போலீசாரையே உலுக்கியுள்ளது.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டுள்ள அந்தப் பெண் கடுமையான போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர் என்று தெரியவந்துள்ளது. அவர் மீது ஏற்கனவே போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதும், கொலை நடந்த சமயத்தில் அவர் முற்றிலும் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு சைக்கோ போலச் செயல்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொடூரக் கொலைச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in