LATEST NEWS
யாரும் எதிர்பாராத திடீர் திருப்பம்… தவெக வுக்கு தமாக ஆதரவு… அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்..!!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி வேட்பாளர்களுக்கு தமாகா ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் முறைப்படி அறிவித்துள்ளார்.
கடந்த பொதுத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்து போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அக்கட்சியுடனான கூட்டணியில் இருந்து விலகியது. இருப்பினும், வரவிருக்கும் இந்த இடைத்தேர்தலில் தமாகா மறைமுகமாக அதிமுகவை ஆதரிக்கக்கூடும் என்று பல்வேறு வட்டாரங்களில் பேசப்பட்டு வந்த நிலையில், அந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜி.கே. வாசன் இன்று தனது புதிய முடிவை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
