LATEST NEWS
“கெட்ட வார்த்தைகளால் திட்டி, நடுரோட்டில் இழுத்து..” நடுரோட்டில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!1
பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தின் கற்பூரிகிராம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜெகத்சிங்பூர் கிராமத்தில், சமஸ்திபூர் காவல்துறை தடையை மீறி ஒரு சிறுமியிடம் சிலர் நடுரோட்டில் அநாகரிகமாக நடந்துகொண்ட அதிர்ச்சி வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. பந்த் பைபாஸ் சாலையில் ஒரு சிறுவனுடன் சென்ற அந்தச் சிறுமி, புகைப்படம் எடுப்பதற்காக நிறுத்தியபோது அங்கிருந்த மூன்று இளைஞர்கள் அவர்களைச் சூழ்ந்துள்ளனர். அந்தச் சிறுவனைத் தாக்கியதுடன், சிறுமியை நடுரோட்டில் இழுத்துச் சென்று தவறான முறையில் தொட்டு துன்புறுத்தியுள்ளனர். மேலும், அவரது பெயர் மற்றும் முகவரியைக் கேட்டு மிரட்டியதோடு, கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.
இந்தச் கொடூர சம்பவத்தின் வீடியோ வைரலானதை அடுத்து, காவல்துறை உயர் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். இதன் பேரில் விரைந்து செயல்பட்ட போலீஸார், விகாஸ் குமார் சர்மா மற்றும் ராகுல் குமார் உட்பட நான்கு இளைஞர்களைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அண்மையில் ஜமுய் மாவட்டத்தில் பள்ளி மாணவி ஒருவருக்கு நேர்ந்த கொடூரத்தைத் தொடர்ந்து, முசாபர்பூர் மற்றும் தற்போது சமஸ்திபூரிலும் இத்தகைய அத்துமீறல்கள் அரங்கேறியுள்ளது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பையும், பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
