LATEST NEWS
“ChatGPT-ஆல் பறிபோன உயிர்” ஐஐடி மாணவர் தற்கொலையின் பின்னணியில் இருந்த ‘அந்த’ சிசிடிவி ரகசியம் உடைந்தது.. வெளியான அதிர்ச்சி வீடியோ..!!
ஐஐடி பாம்பே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பொறியியல் படித்து வந்த மாணவர் சாஹில் வக்கோடே செப்டம்பர் 18-ஆம் தேதி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தின் பின்னணியில், தேர்வு அறையில் மாணவர் மொபைல் போனைப் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபடுவதும், அதை ஆசிரியர் கண்டித்து வெளியேற்றுவதுமான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி இணையத்தில் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளன.
வெளியாகியுள்ள அந்த சிசிடிவி காட்சியில், தேர்வு எழுதிக் கொண்டிருந்த சாஹில் வக்கோடே தன்னிடம் இருந்த மொபைல் போனைப் பயன்படுத்தி, வினாத்தாளை சாட்ஜிபிடி செயலியில் பதிவிட்டு விடைகளைப் பார்த்து எழுதியதாகக் கூறப்படுகிறது. இதைக் கவனித்த தேர்வு கண்காணிப்பாளர் பேராசிரியர் சூர்யநாராயண தூல்லா, மாணவரைப் பிடித்து அவரிடமிருந்த மொபைல் போனைப் பறிமுதல் செய்து தேர்வு அறையை விட்டு வெளியேற்றியுள்ளார். இந்தச் சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே மாணவர் சாஹில் தனது விடுதி அறையில் தூக்கிட்ட நிலையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
இந்தத் தற்கொலையைத் தொடர்ந்து, தங்களது மகன் கல்லூரியில் சாதிப் பாகுபாட்டுக் கொடுமைகளுக்கு ஆளானதாகக் கூறி பேராசிரியரைக் கைது செய்ய வலியுறுத்தி மாணவரின் பெற்றோர்களும், சக மாணவர்களும் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், பேராசிரியர் தூல்லா தனது கடமையைத்தான் செய்தார் என சக ஆசிரியர்கள் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். மாணவர்களின் போராட்டம் வலுத்ததால் பேராசிரியர் சூர்யநாராயண தூல்லா தற்காலிகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த சிசிடிவி ஆதாரம் வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
