LATEST NEWS
“ரொம்ப நன்றி சார்…” ஏஐ-க்கு தாத்தா கொடுத்த மரியாதை… 77 வயது முதியவரின் செயலால் வியந்துபோன தொழில்நுட்ப வல்லுநர்..! இணையத்தில் வைரலாகும் பதிவு..!!
விமானப் பயணத்தின் போது 77 வயது முதியவர் ஒருவர் செயற்கை நுண்ணறிவு சாட்டான ChatGPT-ஐ மிகவும் மரியாதையுடன் ‘சார்’ என்று அழைத்து, புதிய தொழில் திட்டத்தை உருவாக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சமீபத்தில் விமானத்தில் பயணித்த தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர், தனக்கு அருகில் அமர்ந்திருந்த 77 வயது முதியவரைக் கவனித்துள்ளார். அந்த முதியவர் தனது செல்போனில் தீவிரமாக ஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருந்தார். அவர் ‘செங்குத்து விவசாயம்’ தொடர்பான புதிய தொழில் திட்டம் ஒன்றை தயாரிப்பதற்காக ChatGPT-உடன் உரையாடிக் கொண்டிருந்தது தெரியவந்தது.
தொழில்நுட்ப வல்லுநரை வியப்பில் ஆழ்த்தியது அந்த முதியவரின் தொழில் திட்டம் மட்டுமல்ல, அவர் செயற்கை நுண்ணறிவிடம் உரையாடிய விதமும்தான். வழக்கமான கட்டளைகளைப் போலப் பேசாமல், ChatGPT அளித்த பதில்களுக்கு, “மிகவும் அருமையான வழிகாட்டுதல் சார்… மிக்க நன்றி, மீண்டும் உங்களைத் தொடர்புகொள்கிறேன்…” என மிகவும் மரியாதையுடன் பதிலளித்துள்ளார். இந்த அழகிய நிகழ்வை அந்தத் தொழில்நுட்ப வல்லுநர் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார்.
