செத்து பிழைப்பது இதானோ..? மரண தண்டனை பெண்ணுக்கு 2 முறை விஷ ஊசி செலுத்தியும் பிரியாத உயிர்.. அதிர்ச்சியில் உறைந்துபோன அதிகாரிகள்.. அடுத்து நடந்த டுவிஸ்ட்,,!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

செத்து பிழைப்பது இதானோ..? மரண தண்டனை பெண்ணுக்கு 2 முறை விஷ ஊசி செலுத்தியும் பிரியாத உயிர்.. அதிர்ச்சியில் உறைந்துபோன அதிகாரிகள்.. அடுத்து நடந்த டுவிஸ்ட்,,!!

Published

on

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்டா பைக் என்ற பெண்ணுக்கு விஷ ஊசி செலுத்தியும் உயிர் பிரியாததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 1995-ஆம் ஆண்டு தனது சக மாணவியைக் கொடூரமான முறையில் கொலை செய்த வழக்கில் இவருக்கு 1996-இல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளாக அவரது மேல்முறையீடுகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அவரது மரண தண்டனையை இறுதி செய்து தீர்ப்பளித்தது.

இதையடுத்து, சிறை அதிகாரிகளால் அவருக்குப் பென்டோபார்பிட்டல் என்ற ரசாயன விஷ ஊசி செலுத்தப்பட்டது. முதல் ஊசி செலுத்தப்பட்ட பிறகு, ரகசிய அறைக்கான திரை மூடப்பட்டு 3 நிமிடங்கள் கழித்து விலக்கப்பட்ட போது, அவரிடமிருந்து பலத்த குறட்டைச் சத்தம் கேட்டுள்ளது. அவர் இன்னமும் உயிருடன் இருப்பதை உணர்ந்த அதிகாரிகள், மீண்டும் திரையை மூடிவிட்டு இரண்டாவது முறையாக மற்றொரு விஷ ஊசியைச் செலுத்தினர்.

Advertisement

எனினும், இரண்டாவது ஊசிக்குப் பிறகும் அவரது உயிர் பிரியாமல், தொடர்ந்து மூச்சு விடும் சத்தமும் குறட்டைச் சத்தமும் கேட்டுக்கொண்டே இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறை நிர்வாகம் உடனடியாக தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்திவிட்டு, அவரை அவசர மருத்துவச் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து டென்னசி மாகாண ஆளுநர் பில் லீ, இந்தத் தவறான மரண தண்டனை முயற்சி குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in