LATEST NEWS
“மனிதநேயமே செத்துப்போச்சா..?” ஏழை மூதாட்டியை நடுரோட்டில் வைத்து சித்ரவதை செய்த கொடூர நபர்.. நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்த வீடியோ..!!
விலங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்த ரொட்டிகளை, பசியின் கொடுமையால் ஒரு வயதான மூதாட்டி எடுத்துச் சாப்பிட்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் மனிதநேயத்தின் மீதே பெரிய கேள்விக் குறியை எழுப்பியுள்ளது. பசியால் வாடிய அந்த ஏழைப் பெண்மணி செய்த ஒரே தவறு, தன் பசியை ஆற்றிக் கொள்ள அந்த ரொட்டிகளை எடுத்தது மட்டும்தான். ஆனால், அந்த ரொட்டிகளை வைத்த நபர் அந்தமூதாட்டியை ஏதோ ஒரு பெரும் குற்றம் செய்தவரைப் போல நடத்திய விதம் பார்ப்பவர்களின் நெஞ்சங்களை ரணமாக்கியுள்ளது. வெறும் இரண்டு ரொட்டிகளுக்காக, வேறு வழியின்றி தவிக்கும் ஒரு மனிதரை இந்த அளவிற்குத் துன்புறுத்துவது எந்த விதத்தில் நியாயமாகும்? இந்த உலகில் மனிதநேயம் என்ற ஒன்று இன்னும் மிஞ்சியிருக்கிறதா என்ற கேள்வியே எழுகிறது.
விலங்குகளுக்காக ரொட்டிகள் வைக்கப்பட்டிருந்த அதே இடத்தில், ஒரு சக மனிதனின் பசியும் ஆக்ரோஷமாகத் தாண்டவமாடியது என்பதை அந்த நபர் உணரத் தவறிவிட்டார். அந்த மூதாட்டி செய்தது தவறாகவே இருந்தாலும், அவரிடம் அதை அன்பாகவோ அல்லது அறிவுரையாகவோ எடுத்துச் சொல்லியிருக்கலாம். அதை விடுத்து, ஆதரவற்ற மற்றும் ஏழைப் பெண்மணியின் பலவீனத்தைப் பயன்படுத்தி அவரை இந்த அளவிற்குத் துன்புறுத்துவது எந்த வகையான மனிதநேயத்தில் சேரும்? ஒரு மனிதனின் கண்ணியமும் மரியாதையும், வெறும் ஒரு துண்டு ரொட்டியை விட ஆயிரம் மடங்கு மேலானது என்பதை இந்தச் சமூகம் எப்போது புரிந்து கொள்ளப் போகிறது?
