அடச்சீ… பள்ளி மாணவிக்கு ஆபாசக் கடிதம் கொடுத்து பாலியல் சீண்டல்..! தருமபுரியில் 42 வயது ஆட்டோ ஓட்டுநர் போக்சோவில் கைது..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடச்சீ… பள்ளி மாணவிக்கு ஆபாசக் கடிதம் கொடுத்து பாலியல் சீண்டல்..! தருமபுரியில் 42 வயது ஆட்டோ ஓட்டுநர் போக்சோவில் கைது..!!

Published

on

தருமபுரி மாவட்டம், பிடமனேரி பகுதியைச் சேர்ந்த 48 வயதான நபிஷா என்பவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் தினமும் பள்ளி மாணவர்களைத் தன் ஆட்டோவில் அழைத்துச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்நிலையில், இவரது ஆட்டோவில் வழக்கமாகப் பயணம் செய்து வந்த 13 வயது அரசுப் பள்ளி மாணவியிடம், நபிஷா பாலியல் ரீதியாகச் சீண்டலில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்துள்ளது.

மேலும், மாணவியிடம் நபிஷா காதல் கடிதம் ஒன்றைக் கொடுத்துள்ளார். அக்கடிதத்தைத் திறந்து பார்த்தபோது அதில் ஆபாசமான மற்றும் தகாத வார்த்தைகள் இடம்பெற்றிருந்ததால் அதிர்ச்சியடைந்த மாணவி, இச்சம்பவம் குறித்துத் தனது பள்ளி ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். ஆசிரியரின் தகவலின் பேரில், மாவட்ட குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் மாணவியிடம் நேரில் விசாரணை நடத்தி, தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

Advertisement

இப்புகாரின் அடிப்படையில், தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நபிஷா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். தினமும் பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லும் ஆட்டோ ஓட்டுநரே மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in