LATEST NEWS
“ஆட்சியும், போலீசும் உங்ககிட்டதானே இருக்கு… தைரியமிருந்தா ஆக்ஷன் எடுங்க..!” சட்டமன்ற பேரவையில் தவெக அரசுக்கு நேருக்கு நேர் சவால் விட்ட கே.என்.நேரு.. அனல் பறக்கும் விவாதம்..!!
தமிழகச் சட்டமன்றத்தில் “எதற்கெடுத்தாலும் கடந்த ஆட்சியில் ஊழல் என சொல்வதா?” என்று திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, தற்போதைய தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் குற்றச்சாட்டுக்குக் காரசாரமாகப் பதிலடி கொடுத்துள்ளார். அனைத்து மாநகராட்சிகளிலும் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பெரிய அளவில் ஊழல் நடைபெற்றுள்ளதாகத் தவெக தரப்பில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டமன்றத்தில் கடுமையான குற்றசாட்டை ஒன்றை முன்வைத்தார். இதற்குப் பேரவையில் உடனடியாக எழுந்து நின்று ஆக்ரோஷமாகப் பேசிய கே.என்.நேரு, ஆளுங்கட்சியான தவெகவின் இந்தத் தொடர் குற்றச்சாட்டுகளுக்குத் தனது பலத்த கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
அவர் பேசுகையில், “தற்பொழுது ஆட்சியும், அதிகாரமும், காவல்துறையும் உங்களிடம்தான் உள்ளது. எனவே, துறைகளை முழுமையாக ஆய்வு செய்யுங்கள், தவறு நடந்திருந்தால் தாராளமாக நடவடிக்கை எடுங்கள்” என்று தவெக அரசுக்கு நேருக்கு நேர் சவால் விடுத்துள்ளார். அதை விடுத்து எதற்கெடுத்தாலும் கடந்த காலத்தைக் குற்றம் சொல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். சட்டமன்ற பேரவையில் தவெக அமைச்சர் மற்றும் திமுக முன்னாள் அமைச்சர் இடையே அரங்கேறிய இந்த அனல் பறக்கும் நேரடி விவாதம் தற்பொழுது தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
