LATEST NEWS
“அன்று செங்கோட்டையன், இன்று ஆதவ் அர்ஜூனா..!” முதலமைச்சர் விஜய் சட்டசபையில் எடுத்த திடீர் அதிரடி முடிவு.. சட்டமன்றத்தில் பரபரப்பு..!!
தமிழகச் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் முதலமைச்சர் விஜய், தனக்கான பிரத்யேக இருக்கையைத் தவிர்த்துவிட்டு சக அமைச்சர்களின் இருக்கைகளுக்குச் சென்று அமர்ந்து சபை நடவடிக்கைகளைக் கவனிப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வார விடுமுறைக்குக் பின் கூடிய இன்றைய கூட்டத்தொடரில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றன. அப்போது திடீரென இருக்கை மாறிய முதலமைச்சர் விஜய், நீர்வளத்துறை அமைச்சர் புஸ்சி ஆனந்த்தின் இருக்கையில் சென்று அமர்ந்ததோடு, அங்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுடன் தீவிரமாக விவாதித்தபடி சபையின் விவாதங்களைக் கவனித்தார்.
முதலமைச்சர் விஜய் இதுபோன்று சட்டமன்றத்தில் தனது இருக்கையை மாற்றி அமர்வது இது முதன்முறையல்ல. கடந்த வாரம் நடைபெற்ற மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போதும், அவர் இதேபோல் இடம் மாறிச் சென்று அமைச்சர் செங்கோட்டையன் அருகே அமர்ந்து சபையின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. “அன்று செங்கோட்டையன், இன்று ஆதவ் அர்ஜூனா” என முதலமைச்சர் விஜய் அமைச்சர்களுடன் நெருக்கமாக அமர்ந்து சபையை நடத்தும் இந்த எதார்த்தமான சுவாரசியச் சம்பவங்கள் தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.
