LATEST NEWS
“சும்மா சொல்லக்கூடாது தல…! மைதானத்திலும் மாஸ்… ரோட்டிலும் மாஸ்..! ரூ.12 கோடி ஃபெராரி காரில் கெத்து காட்டிய ஹார்திக் பாண்டியா..!” திகைத்துப்போன ரசிகர்கள்… வைரல் வீடியோ..!!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான ஹார்திக் பாண்டியா, மைதானத்தில் தனது சிறப்பான ஆட்டத்திற்காக மட்டுமன்றி, மைதானத்திற்கு வெளியே தனது தனித்துவமான ஸ்டைல் மற்றும் ஆடம்பரமான வாழ்க்கை முறைக்காகவும் எப்போதும் பேசப்படுபவர். அந்த வகையில், பெங்களூரில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தில் தனது பயிற்சிக்குப் பிறகு, அவர் தனது புதிய ஆகாய நீல நிற ‘ஃபெராரி 12சிலிண்ட்ரி’ காரில் வந்திறங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வைரலான அந்த வீடியோவில், பயிற்சி அமர்வை முடித்துக் கொண்டு பயிற்சி ஆடைகளுடன் வெளியே வந்த பாண்டியா, வழியில் நிறுத்தப்பட்டிருந்த தனது சொந்த சூப்பர் காரைக் கண்டு சிறிது நேரம் நிற்கிறார். ஒரு தீவிர கார் பிரியரைப் போலத் தனது செல்போனை எடுத்து, தனது சொந்த காரை ஆசையுடன் புகைப்படம் எடுக்கிறார். அதன்பின்னர், தனது குழுவினருடன் சென்று அந்த இத்தாலிய வி12 மாடல் காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டுச் செல்கிறார்.
ஹார்திக் பாண்டியா வைத்திருக்கும் இந்த அதிநவீன ஃபெராரி 12சிலிண்ட்ரி காரின் தோராயமான மதிப்பு ரூ.12 கோடி எனக் கூறப்படுகிறது. கிளாசிக் கிராண்ட் டூரர் டிசைன் மற்றும் சக்திவாய்ந்த வி12 எஞ்சின் கொண்ட இந்த ஆடம்பர கார், கார் பிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், சமூக வலைதளங்களிலும் இந்த வீடியோ மற்றும் புகைப்படம் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
