LATEST NEWS
பால் கொள்முதல் விலை உயர்வு முதல் அடுத்தடுத்த அதிரடி ட்விஸ்ட்கள்.. 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்த மாஸ் அறிவிப்புகள்.. மிரள வைக்கும் முழு விபரம் உள்ளே..!!
தமிழகச் சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் தமிழக மக்களுக்கான பல்வேறு முக்கிய அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். பால் உற்பத்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு மேலும் 3 ரூபாய் உயர்த்தி, தற்பொழுது கொள்முதல் விலை 44 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்த 3.15 லட்சத்திற்கும் அதிகமான பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறுவார்கள் என்றும், இதனால் ஆவினுக்கு ஏற்படும் கூடுதல் செலவை அரசே ஏற்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார். மேலும், கடந்த ஆட்சியில் புதிய மின் நிலையங்கள் அமைக்கப் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சாடிய முதல்வர், தூத்துக்குடியில் ரூ.20,800 கோடியில் புதிய அனல்மின் நிலையம் அமைக்கப்படும் என்றும், மின் பகிர்மான மேம்பாட்டிற்காக ரூ.1,762 கோடியில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
தொழில் மற்றும் வேலைவாய்ப்புத் துறையை மேம்படுத்தும் வகையில், காஞ்சிபுரம் மதுரமங்கலத்தில் ரூ.175 கோடி மதிப்பீட்டில் சிப்காட் மூலம் புதிய செமி கண்டெக்டர் நிறுவனம் அமைக்கப்பட்டு 5,000 பேருக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இதுமட்டுமின்றி, திருச்சியில் பல்முனை சரக்கு போக்குவரத்து மையமும், கோவையில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்ட டிஜிட்டல் நிதி மையமும் அமைக்கப்படும் எனப் பொருளாதார வளர்ச்சிக்கான மாஸ் திட்டங்களை அவர் அடுக்கடுக்காக வெளியிட்டுள்ளார். முதலமைச்சர் விஜய்யின் இந்த அதிரடி 110 விதி அறிவிப்புகள் தமிழக மக்கள் மற்றும் தொழில் துறையினர் மத்தியில் தற்பொழுது பெரும் வரவேற்பைப் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
