“இது என்னடா கூத்து.. ஆற்று வெள்ளத்தில் மீனுக்குப் பதிலா மிதந்த ‘அந்த’ பொருள்..” உயிரைப் பணையம் வைத்து தூண்டில் போட்ட மக்கள்.. நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இது என்னடா கூத்து.. ஆற்று வெள்ளத்தில் மீனுக்குப் பதிலா மிதந்த ‘அந்த’ பொருள்..” உயிரைப் பணையம் வைத்து தூண்டில் போட்ட மக்கள்.. நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ..!!

Published

on

சத்தீஸ்கர் மாநிலம் தம்தரி பகுதியில் உள்ள மகாநதியில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கிற்கு இடையே, ஆற்றில் மிதந்து வந்த மதுபாட்டில்களைத் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு அள்ளிச் சென்ற விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. தம்தரியின் குருத் பகுதிக்கு உட்பட்ட நாரி கிராமத்தில் உள்ள அரசு மதுபானக் கடை ஒன்று, மகாநதி வெள்ளத்தில் முழுமையாக மூழ்கியுள்ளது. இதனால் கடையில் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த உள்ளூர் நாட்டு மதுபாட்டில்கள் அனைத்தும் வெள்ள நீரில் மிதந்து ஆற்றில் அடித்து வரப்பட்டுள்ளன. பாலத்தின் மீது நின்று ஆற்று வெள்ளத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள், தண்ணீரில் பாட்டில்கள் மிதந்து வருவதைக் கண்டதும் அவற்றை அள்ளுவதற்காகப் பெரும் கூட்டமாகத் திரண்டுள்ளனர்.

ஆற்றின் நீர்வரத்து மிகத் தீவிரமாகவும், நீரோட்டம் பயங்கர வேகமாகவும் இருந்த போதிலும், மதுப்பிரியர்கள் தங்களின் பாதுகாப்பு குறித்த எவ்வித அச்சமும் இன்றி ஆற்றின் மிக அருகில் சென்று ஆபத்தான முறையில் பாட்டில்களைப் பிடிக்க முயன்றனர். பாலத்தின் மேலிருந்தபடியே கயிறுகள், மூங்கில் கம்புகள் மற்றும் மீன்பிடி வலைகளை ஆற்றுக்குள் வீசி, தண்ணீரில் மிதக்கும் மதுபாட்டில்களைச் சிக்க வைக்கப் பல்வேறு நூதன வழிகளைக் கையாண்டுள்ளனர். வெள்ள அபாயம் காரணமாக மக்கள் நதிகள் மற்றும் பாலங்களிலிருந்து தூரமாக இருக்குமாறு உள்ளூர் நிர்வாகம் தொடர்ந்து எச்சரித்து வரும் வேளையில், மதுவிற்காக மக்கள் செய்த இந்த ஆபத்தான அலட்சிய வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in