அய்யோ கொடுமையே… குடும்பத் தகராறில் நேர்ந்த கொடூரம்..! கணவனை அடித்துக் கொன்று காட்டுக்குள் புதைத்த மனைவி, மகன்… விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் உண்மை..!! – cinefeeds
Connect with us

CRIME

அய்யோ கொடுமையே… குடும்பத் தகராறில் நேர்ந்த கொடூரம்..! கணவனை அடித்துக் கொன்று காட்டுக்குள் புதைத்த மனைவி, மகன்… விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் உண்மை..!!

Published

on

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் நெய்யமலை கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (44). கூலித் தொழிலாளியான இவருக்கும், இவரது மனைவி பழனியம்மாளுக்கும் (40) இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில், பழனியம்மாள் கோபித்துக் கொண்டு தனது மகன் முருகனுடன் (21) பெற்றோரின் வீட்டிற்குச் சென்றார். இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், கோவிந்தராஜ் தனது மாமனார் மாணிக்கத்தை நாட்டுத் துப்பாக்கியால் சுட்ட வழக்கில் கைதாகி பிணையில் வெளியே வந்திருந்தார். பின்னர், வாழப்பாடி மங்கம்மா சாலை பகுதியில் தங்கித் தோட்டத்தில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு மாமனார் வீட்டிற்குச் சென்று மனைவியையும் மகனையும் வீட்டிற்கு வருமாறு கோவிந்தராஜ் அழைத்துள்ளார். அவர்கள் வர மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் மனைவியை அவர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பழனியம்மாள், அவரது மகன் முருகன், மாமனார் மாணிக்கம் மற்றும் மைத்துனர் பெரியசாமி ஆகிய 4 பேரும் சேர்ந்து கோவிந்தராஜை சரமாரியாகத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதிர்ச்சியடைந்த 4 பேரும் அவரது உடலை அருகிலுள்ள காட்டுப் பகுதியில் புதைத்தனர்.

Advertisement

சொந்த ஊருக்குச் சென்ற கோவிந்தராஜ் மீண்டும் வேலைக்கு வராததால், சந்தேகமடைந்த தோட்ட உரிமையாளர் ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், 4 பேரும் சேர்ந்து கோவிந்தராஜை கொலை செய்து காட்டுக்குள் புதைத்தது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார், நெய்யமலை வனப்பகுதியில் புதைக்கப்பட்டிருந்த கோவிந்தராஜின் உடலைத் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்குப்பின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in