“ஐயோ என்ன கொடுமை இது…! 2 வயது பிஞ்சு குழந்தையுடன் தூக்கில் தொங்கிய தாய்…” மூடிய கதவுக்குள் நடந்தது என்ன…? நெஞ்சை நடுங்க வைத்த பகீர் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஐயோ என்ன கொடுமை இது…! 2 வயது பிஞ்சு குழந்தையுடன் தூக்கில் தொங்கிய தாய்…” மூடிய கதவுக்குள் நடந்தது என்ன…? நெஞ்சை நடுங்க வைத்த பகீர் சம்பவம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில், மேக்ஸ் மருத்துவமனையில் ஊழியராகப் பணியாற்றி வரும் சோனு என்பவரின் மனைவி பிரீதி, தனது 2 வயது பிஞ்சு பெண் குழந்தையுடன் வாடகை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளாக அந்த வாடகை வீட்டில் இந்த குடும்பத்தினர் வசித்து வந்த நிலையில், திடீரென தாயும் மகளும் ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கியவாறு கிடந்ததைக் கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து போலிஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிஸார், இருவரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

இச்சம்பவம் தொடர்பாகக் கணவர் சோனுவை போலிஸார் உடனடியாகக் காவலில் எடுத்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது தற்கொலையா அல்லது குடும்பத் தகராறு காரணமாக அரங்கேற்றப்பட்ட கொலையா என்ற பல கோணங்களில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2 வயது பிஞ்சு குழந்தையுடன் தாய் தூக்கில் தொங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in