LATEST NEWS
“எதுக்கு வரலாறு பேசுறீங்க…?” சட்டமன்றத்தில் தவெக எம்.எல்.ஏ கார்த்திகேயன் காட்டிய விஸ்வரூபம்… சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரின் உத்தரவால் சட்டமன்றத்தில் நிலவிய நிசப்தம்..!!
“எதுக்கு வரலாறு பேசுறீங்க?” என்று ஜே.சி.டி பிரபாகர், தவெக எம்.எல்.ஏ கார்த்திகேயனை அமர வைத்த சம்பவம் . தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில், மதுரை கிழக்குத் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் பேசும்போது, “மதுரை தீர்த்தக்காடு பகுதியில் கடந்த 60 ஆண்டு கால ஆட்சியில் எந்த வசதியும் செய்து தரப்படவில்லை” என்று தனது உரையைத் தொடங்கினார். அவர் கடந்த கால ஆட்சிகளைக் குறிப்பிட்டுப் பேசத் தொடங்கிய அடுத்த கணமே குறுக்கிட்ட சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர், கார்த்திகேயனின் வரலாற்றுப் பேச்சுக்குத் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிரடியாகத் தடுத்து நிறுத்தினார்.
சபாநாயகர் பேசுகையில், “வினா நேரம், கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் பேசும் போதும், உரை நிகழ்த்தும் போதும் ‘இன்று வரை அங்கு வசதியில்லை’ என்று மட்டும் குறிப்பிடுங்கள்; அதை விடுத்து ஆண்டுகளைக் குறிப்பிட்டு தேவையில்லாமல் வரலாறு பேச வேண்டாம், இங்கு அனைவருக்கும் வரலாறு தெரியும், முதலில் அமருங்கள்” என்று கூறி கார்த்திகேயனை மேடையிலேயே அமர வைத்தார். சபாநாயகரின் இந்த அதிரடி ஆக்ஷன் மற்றும் தவெக எம்.எல்.ஏ-வுக்குச் சட்டமன்றத்தில் நேர்ந்த இந்த இக்கட்டான தருணம் தற்பொழுது சமூக வலைத்தளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் பலத்த விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
