LATEST NEWS
அடக்கொடுமையே…! வீட்டை விட்டு கோவிச்சுக்கிட்டு போன பொண்டாட்டி… சமாதானம் பேசச் சென்ற புருஷன் தண்டவாளத்தில் பிணமாக மீட்பு..! அகமதாபாத்தில் உலுக்கிய குடும்பத் தகராறு..!!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவமாக மாறியுள்ளது. அம்ரேலி மாவட்டத்தைச் சேர்ந்த 42 வயது பெண் ஒருவர், கணவருடன் ஏற்பட்ட தொடர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில நாள்களாக அகமதாபாத்தில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கியிருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மனைவியை சமாதானப்படுத்துவதற்காக கணவர் அங்கு சென்றுள்ளார்.
ஆகஸ்ட் 29-ஆம் தேதி அதிகாலை சுமார் 5.30 மணியளவில் கணவர் அகமதாபாத்தில் உள்ள மனைவியின் சகோதரி வீட்டுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சூழலில் மனைவி காயமடைந்ததாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சம்பவத்துக்குப் பிறகு கணவர் அங்கிருந்து சென்றுவிட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அகமதாபாத் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். சம்பவத்தின் பின்னணி, இருவருக்கும் இடையே நீண்டகாலமாக இருந்த குடும்பப் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, அம்ரேலி மாவட்டம் தாசா பகுதியில் ரயில் பாதையில் கணவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து தாசா போலீஸாரும் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன்-மனைவி இடையேயான குடும்பத் தகராறு எவ்வாறு இந்த அளவுக்கு விபரீதமாக மாறியது என்பது குறித்து இரு மாவட்ட போலீஸாரும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
