“என் பொண்டாட்டிய கொன்னுட்டேன்..!” உறவினர்களுக்கு வீடியோ கால் செய்து… அடுத்த நொடியே கணவன் எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை நடுங்க வைக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என் பொண்டாட்டிய கொன்னுட்டேன்..!” உறவினர்களுக்கு வீடியோ கால் செய்து… அடுத்த நொடியே கணவன் எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை நடுங்க வைக்கும் சம்பவம்..!!

Published

on

கர்நாடக மாநிலம் பேளூர் தாலுகா கேசகோடு கிராமத்தில், மனைவியைக் கொலை செய்து விட்டு கணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஹளேபீடு அருகே உள்ள சனேனஹள்ளியைச் சேர்ந்த ககனா என்பவரும், கேசகோடு கிராமத்தைச் சேர்ந்த ரகு என்பவரும் கடந்த 13 ஆண்டுகளாகத் திருமண வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு 12 மற்றும் 6 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். சிக்கமகளூரில் பேக்கரி தொழில் செய்து வந்த இவர்கள், வெள்ளிக்கிழமை காரில் கேசகோடு கிராமத்திற்குப் பயணித்துக் கொண்டிருந்த போது, வழியிலேயே ரகு தன் மனைவி ககனாவைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

In a grim incident reported from Kesagodu village in Belur taluk, a man allegedly murdered his wife and later hanged himself to death. The victim’s body is suspected to have been thrown into the Yagachi canal.

The deceased have been identified as Gagana (38) , a housewife from… https://t.co/v9ghX3QCT7 pic.twitter.com/TZ3EyWemQC— Hate Detector 🔍 (@HateDetectors) August 1, 2026

கொலை செய்த கையோடு, தன் உறவினர்களுக்கு வீடியோ கால் செய்த ரகு, மனைவியைக் கொன்று உடலை யாகச்சி கால்வாயில் வீசிவிட்டதாகக் கூறி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். பின்னர் தனது கிராமத்திற்குச் சென்ற அவர், அங்கேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த அரேஹள்ளி காவல்துறையினர் ரகுவின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கால்வாயில் வீசப்பட்ட ககனாவின் உடலைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இக்கொடூரச் சம்பவத்திற்கான காரணம் குறித்துப் போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in