“என் சாவுக்கு இவங்கதான் காரணம்..” செல்ஃபி வீடியோ எடுத்துவிட்டு உயிரை மாய்த்த வாலிபர்.. இணையத்தில் வைரலாகும் காட்சி..!! – cinefeeds
Connect with us

CRIME

“என் சாவுக்கு இவங்கதான் காரணம்..” செல்ஃபி வீடியோ எடுத்துவிட்டு உயிரை மாய்த்த வாலிபர்.. இணையத்தில் வைரலாகும் காட்சி..!!

Published

on

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், தனது குடும்பப் பிரச்சினையே தனது முடிவுக்குக் காரணம் எனக் கூறி, இளைஞர் ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. முகமது நசிருல் என்ற அந்த இளைஞர், அக்டோபர் 1-ஆம் தேதியன்று இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். நசிருலின் உறவினர்கள் சேர்ந்து, அவரது மனைவியை அவரிடமிருந்து பிரித்து அழைத்துச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான நசிருல், ஒரு காணொளியைப் பதிவு செய்துவிட்டு இந்த முடிவை எடுத்துள்ளார்.

சம்பவம் நடந்து சில நாட்களுக்குப் பிறகு, அவர் பதிவு செய்த அந்த காணொளி தற்போது வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆதாரத்தின் அடிப்படையில், முகமது நசிருலின் மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது ஜெய்ப்பூர் காவல்துறை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பந்தப்பட்டவர்களைப் பிடிக்கத் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in