கையில் குழந்தையோடு தடுமாறிய உஷா வேன்ஸ்… பக்கத்திலேயே நின்று வேடிக்கை பார்த்த அதிகாரிகள்! இணையத்தில் வைரலான வீடியோவால் வெடிக்கும் சர்ச்சை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கையில் குழந்தையோடு தடுமாறிய உஷா வேன்ஸ்… பக்கத்திலேயே நின்று வேடிக்கை பார்த்த அதிகாரிகள்! இணையத்தில் வைரலான வீடியோவால் வெடிக்கும் சர்ச்சை..!!

Published

on

அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸின் மனைவியும், அந்நாட்டின் இரண்டாம் பெண்மணியுமான உஷா வேன்ஸ், மேரிலாந்தில் உள்ள ஜாயிண்ட் பேஸ் ஆண்ட்ரூஸ் தளத்தில் ஹெலிகாப்டரில் இருந்து கீழே இறங்கும்போது எதிர்பாராதவிதமாகத் தடுமாறி விழப் பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உஷா வேன்ஸ் தனது 9 வாரக் குழந்தையான அலெக் நீல் வேன்ஸைத் தனது மார்போடு அணைத்தவாறு ஹெலிகாப்டரின் படிகளில் இருந்து இறங்கி வந்துகொண்டிருந்தார். அப்போது அவர் திடீரெனத் தடுமாறி நிலைதடுமாறியபோதிலும், உடனே படிக்கட்டின் கைப்பிடியைப் பிடித்துத் திறம்படச் சமாளித்து, குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாப்பாகக் கீழே இறங்கினார்.

Advertisement

இந்தச் சம்பவத்தின்போது அருகில் சீருடையில் நின்றிருந்த ராணுவ அதிகாரிகள் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், ஆபத்தான சூழலில் பாதுகாப்பு விதிமுறைகளை விட மனிதநேயத்துடன் அதிகாரிகள் செயல்பட்டிருக்க வேண்டும் என்ற விமர்சனங்களும், குழந்தையைக் காப்பாற்றிய உஷா வேன்ஸின் தாயுள்ளத்தைப் பாராட்டி நெட்டிசன்களின் கருத்துகளும் குவிந்து வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in