“அடிப்பாவி சீட் தரலைன்னு இப்படியா..” மெட்ரோ ரயிலை WWE ரிங்காக மாற்றிய ரவுடி பெண்.. சகபயணிக்கு நேர்ந்த அவலம்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அடிப்பாவி சீட் தரலைன்னு இப்படியா..” மெட்ரோ ரயிலை WWE ரிங்காக மாற்றிய ரவுடி பெண்.. சகபயணிக்கு நேர்ந்த அவலம்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!

Published

on

மெட்ரோ ரயில் ஒன்றில் பெண் பயணி ஒருவருக்கு அமர்வதற்கு இருக்கை கிடைக்காததால், அவர் அந்தப் பொதுப் போக்குவரத்தையே ஒரு WWE சண்டைக் களமாக மாற்றி அநாகரிகமாக ரகளையில் ஈடுபட்ட அதிர்ச்சிச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தனக்கு முன்னால் இருக்கையில் அமர்ந்திருந்த நபரிடம் எவ்வித காரணமுமின்றி வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்தப் பெண், அவரை மோசமான வார்த்தைகளால் திட்டித் தீர்த்துள்ளார். கோபத்தின் உச்சிக்குச் சென்ற அவர், அந்த நபரை இருக்கையிலிருந்து பலவந்தமாகத் தள்ளியதுடன், கைகளால் குத்துவதற்கும் ஓங்கி அச்சுறுத்தல் விடுத்துத் தனது எல்லையற்ற திமிரைக் காட்டியுள்ளார்.

நல்லவேளையாக, அந்த நபர் அந்தப் பெண்ணின் ஆக்ரோஷத்திற்குப் பதிலடி கொடுக்காமல் மிகுந்த பொறுமையைக் கையாண்டதால் அங்கு ஒரு பெரும் வன்முறை அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஒருவேளை அந்த நபர் பொறுமை இழந்து, பெண்ணின் அராஜகத்திற்குத் தகுந்த பதிலடி கொடுத்திருந்தால், இருக்கைப் பிரச்சினைக்கு அப்போதே ஒரு இறுதி முடிவு வந்திருக்கும்; அந்தப் பெண்ணின் அத்தனை திமிரும் அராஜகமும் அதே இடத்திலேயே அடங்கியிருக்கும் என இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in