LATEST NEWS
“ரூ.600 கோடி சொத்து உண்மைதான்..” நீதிமன்றத்தில் அதிரடி திருப்பம்… CM விஜய் தரப்பு பரபரப்பு வாதம்..!!
CM விஜய்யின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்குகள் மீதான இறுதி விசாரணை தீவிரமடைந்துள்ளது. இன்று CM தரப்பில் வாதிடுகையில், தனக்கும் தனது மனைவிக்கும் ரூ.600 கோடி சொத்துகள் உள்ளதற்கான வருமான வரி விவரங்கள் எதையும் மறைக்காமல் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், வேறு எந்த முக்கியத் தகவல்களையும் தாங்கள் மறைக்கவில்லை என்றும், வேட்புமனுவில் உள்ள ஒருசில சிறு பிழைகளுக்காகவே மனுவை ஏற்றதே தவறு என கூறிவிட முடியாது என்றும் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நாளையும் தொடர்ந்து நடைபெறவுள்ளது.
