LATEST NEWS
“நேற்று Request… இன்று வேலை..” 24 மணிநேரத்தில் மாற்றுத்திறனாளி இளைஞருக்கு ஆணை வழங்கி மாஸ் காட்டிய CM விஜய்..!!
இளைஞர் ஒருவருக்கு CM விஜய் அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து வேலைவாய்ப்பு வழங்கியுள்ளார். சென்னை கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வின் போது, மாற்றுத்திறனாளி இளைஞரான தினேஷ் என்பவர் முதல்வரைச் சந்தித்துத் தனது குடும்ப நிலைமை குறித்துக் கூறி, தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு வழங்குமாறு கோரிக்கை மனு அளித்திருந்தார்.
அந்த மனுவைப் உடனடியாகப் பரிசீலித்த முதல்வர், 24 மணிநேரத்திற்குள்ளாகவே அவருக்குப் பணி ஆணை வழங்க உத்தரவிட்டார். அதன்படி, திருவொற்றியூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ‘வொர்க்ஷாப் அசிஸ்டண்ட்’ பணிக்கான ஆணையை இளைஞர் தினேஷ் நேரடியாக முதல்வரிடமே பெற்றுக்கொண்டார்.
