LATEST NEWS
“சினிமா ஸ்கிரிப்டை மிஞ்சிய நிஜ சம்பவம்..! கையும் களவுமாகச் சிக்கிய காதலர்கள்… கதவை வெளிப்பக்கமாக பூட்டி… ஊர்மக்கள் போட்ட மெகா ஸ்கெட்ச்..!!”
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாட் மாவட்டத்தில் உள்ள டேராபூர் காவல் எல்லைக்கு உட்பட்ட கிர்வா தேரா கிராமத்தில், திருமணமான பெண் ஒருவரைச் சந்திக்க வந்த காதலனை பெண்ணின் குடும்பத்தினரும் கிராம மக்களும் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். பகல் நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த இளைஞரைப் பார்த்த கிராம மக்கள், வீட்டின் கதவை வெளியிலிருந்து பூட்டிவிட்டு, வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்ணின் வீட்டினருக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து கதவைத் திறந்தபோது, இருவரும் வீட்டிற்குள் இருந்ததால் ஆத்திரமடைந்த அவர்கள் இருவரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
ஆத்திரமடைந்த குடும்பத்தினரும் ஊர்மக்களும் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, அந்த இளைஞரையும் பெண்ணையும் கயிற்றால் கட்டிவைத்து தடிகளாலும் உதைத்தும் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். பின்னர் இருவரையும் காவல் நிலையத்திடம் ஒப்படைத்தனர். அந்தப் பெண்ணிற்கு ஏற்கனவே அதே பகுதியைச் சேர்ந்த வேறு ஒருவருடன் 6 ஆண்டுகளாகக் காதல் தொடர்பு இருந்து வந்ததாகவும், கடந்த 2 மாதங்களாகவே கிர்வா கிராமத்தைச் சேர்ந்த இந்த புதிய இளைஞருடன் தொடர்பு ஏற்பட்டு நெருக்கம் கூடியதாகவும் கூறப்படுகிறது.
இந்தக் கொடூரமான தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தெரிவித்த டேராபூர் காவல் நிலைய அதிகாரி தீரேந்திர சிங், இந்த சம்பவம் தொடர்பான வீடியோவைக் கவனத்தில் கொண்டுள்ளதாகவும், தீவிர விசாரணைக்குப் பிறகு இதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
