LATEST NEWS
“போலீஸைக் கூப்பிட்டு ஜெயிலில் தள்ளுவேன்..!” வீடியோ எடுத்த பெண்ணின் போனை பிடுங்கி அறைந்த ஸ்டேஷன் மாஸ்டர்.. ரயில் நிலையத்தில் அதிகாரியின் ரவுடித்தனம்.. இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ
சூரத் நகரில் உள்ள உத்ரன் இரயில் நிலையத்தில், தட்கல் பயணச்சீட்டு வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்த பெண் பயணி ஒருவருக்கு இரயில்வே ஊழியர்கள் பயணச்சீட்டு வழங்க மறுத்துள்ளனர். இதற்கான காரணத்தைக் கேட்டு, புகார் புத்தகத்தை வழங்குமாறு அப்பெண் கோரியபோது, நிலைய அதிகாரி மனோஜ் புகாரைப் பதிவு செய்ய மறுத்துள்ளார். இதனால், தனக்கு நேர்ந்த அவலத்தை ஆதாரத்திற்காகத் தனது செல்போனில் அப்பெண் வீடியோவாகப் பதிவுசெய்ய முயன்றபோது, ஆத்திரமடைந்த நிலைய அதிகாரி மனோஜ் அந்தப் பெண்ணின் செல்போனைப் பிடுங்கி, அவரை இரண்டு, மூன்று முறை சரமாரியாகக் கன்னத்தில் அறைந்துள்ளார். மேலும், தகாத வார்த்தைகளால் திட்டி, காவல்துறையை அழைத்துச் சிறையில் அடைத்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.
सूरत के उत्राण रेलवे स्टेशन पर एक महिला तत्काल टिकट के लिए लाइन में खड़ी थी। स्टाफ ने टिकट नहीं दिया। जब उसने शिकायत बुक मांगी तो स्टेशन मास्टर मनोज ने मना कर दिया।
महिला ने सबूत के लिए वीडियो बनाना शुरू किया तो स्टेशन मास्टर भड़क गए। फोन छीन लिया, ओर दो-तीन थप्पड़ मारे, गालियाँ… pic.twitter.com/r7GFdQ208t— Mandeep RajBhar (@MandeepRajBhar9) August 7, 2026
இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட பெண், இரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். ஆனால், அதிகாரிகளோ தவறு செய்த நிலைய அதிகாரியைக் காப்பாற்றும் வகையில் அவருக்கு ஆதரவாகப் பேசி, நடவடிக்கை எடுக்க ஒரு வாரம் அவகாசம் கேட்டுள்ளனர். தனக்கு நேர்ந்த அநீதி குறித்துப் புகார் அளிக்கச் சென்ற ஒரு பெண் பயணிக்கு, நியாயத்திற்குப் பதிலாக அடியும் மிரட்டலும் மட்டுமே கிடைத்துள்ள இந்தச் சம்பவம், இரயில்வே நிர்வாகத்தின் மீதும் ஒட்டுமொத்த அதிகார அமைப்பின் மீதும் பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
