LATEST NEWS
“வியூஸ்களுக்காக இப்படியா பண்றது..?” ரீல்ஸ் செய்யப்போய் நடந்த விபரீதம்.. கண்ணீரில் நனைந்த பெண்.. இணையத்தில் வைரலாகும் சோக வீடியோ..!!
சமூக வலைதளங்களில் ‘வியூஸ்’ மற்றும் லைக்குகளைப் பெற வேண்டும் என்ற மிதமிஞ்சிய ஆர்வத்தால், பலர் தங்கள் பாதுகாப்பையும் வாழ்வாதாரத்தையும் பணயம் வைப்பது கவலையளிக்கும் போக்காக மாறிவருகிறது. ‘ரீல்ஸ்’ வீடியோ படமாக்கும் முயற்சியில் பெண் ஒருவர் தவறுதலாகத் தனது செல்போனின் திரையை உடைத்துக் கொண்ட சம்பவமும், அதைப் பழுதுபார்க்கக்கூடப் பணமில்லாமல் அவர் வேதனையுடன் கண்ணீர் வடிக்கும் வீடியோவும் இதற்கு ஒரு சோகமான சான்றாகும்.
వ్యూస్ కోసం వెంపర్లాడొద్దు.. సేఫ్టీని మాత్రం పణంగా పెట్టొద్దు.
ఈమె వీడియో చేయాలనే ప్రయత్నంలో ఫోన్ స్క్రీన్ పగులగొట్టుకుంది. కొత్త స్క్రీన్ వేయించుకునే డబ్బులు కూడా లేవని చెబుతోంది.
నదులు, చెరువులు, వాగుల దగ్గర రీల్స్ చేసే ముందు ఒక్కసారి ఆలోచించండి.. నీళ్లు అందంగా కనిపిస్తాయి… pic.twitter.com/TtzWpkbhbB— TeluguBulletin.com (@TeluguBulletin) August 8, 2026
ஆறுகள், குளங்கள் அல்லது நீர்நிலைகளுக்கு அருகே வீடியோக்களைப் படமாக்குவதற்கு முன் ஒரு முறைக்கு பல முறை யோசியுங்கள். தண்ணீர் பார்ப்பதற்கு அழகாகத் தோன்றினாலும், அதில் ஒளிந்துள்ள ஆபத்துக்கள் வெளியே தெரியாது. ‘வியூஸ்’ பெறுவதற்காகச் செய்யப்படும் ஒவ்வொரு முயற்சியும் வைரலாக வேண்டும் என்பதில்லை; ஆனால் நாம் செய்யும் ஒரு சிறிய தவறு மிகப்பெரிய இழப்பையும் ஆறாத் துயரத்தையும் கொடுத்துவிடும்.
