LATEST NEWS
“வழக்கை வாபஸ் பெற்றார்… ஆனா அங்க தான் இருக்கு அந்த ‘டுவிஸ்ட்’…!” சங்கீதாவின் முடிவுக்குப் பின்னால் இருக்கும் அதிர்ச்சி பின்னணி..!!!
தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்த நிலையில், தற்போது அதில் முக்கியமான திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கை மேற்கொண்டு தொடர விருப்பமில்லை என்று காணொலி காட்சி வாயிலாக ஆஜரான சங்கீதா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், எதிர்காலத்தில் தேவைப்பட்டால் புதிய மனு தாக்கல் செய்யும் உரிமையுடன், தற்போதைய விவாகரத்து மனுவை வாபஸ் பெற அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக அரசியல் தளத்திலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதப் பொருளாக இருந்த இவ்வழக்கு வாபஸ் பெறப்பட்டது பல்வேறு ஊகங்களை எழுப்பியுள்ளது. குடும்ப நலன் மற்றும் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இந்த மனு வாபஸ் குறித்து விஜய் அல்லது சங்கீதா தரப்பிலிருந்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.
