LATEST NEWS
MGR, ஜெயலலிதாவுக்கு பிறகு தில்லா கெத்தா.. திமுகவை எதிர்ப்பது நான் தான்… தாராபுரத்தை அதிரவைத்த முதலமைச்சர் விஜய்..!!
தமிழக முதலமைச்சர் விஜய், தாராபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்குப் பிறகு திமுகவை தைரியமாக எதிர்ப்பது தான்தான் என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அன்று நடந்தது அம்மாவின் (ஜெயலலிதா) ஆட்சி, அடுத்து நடந்தது அப்பாவின் ஆட்சி, ஆனால் இப்போது நடப்பது உங்கள் பிள்ளையின் ஆட்சி என்று தற்போதைய தமிழக அரசின் சாதனைகளை ஒப்பிட்டு முழங்கினார்.
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கூறும் பொய்களை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார். மேலும், தாராபுரம் தொகுதியில் சத்தியத்தின் பக்கம் நின்று போட்டியிடும் தங்களது கட்சி வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ‘விசில்’ சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அவர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
பரப்புரையின் நிறைவாக, முதலமைச்சர் விஜய் தனது கழுத்தில் அணிந்திருந்த விசிலை எடுத்து மக்கள் முன்னிலையில் சத்தமாக ஊதி, வேட்பாளருக்கு உற்சாகமாக வாக்கு சேகரித்தார். இந்த நிகழ்வு அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், பலத்த கைதட்டலையும் பெற்றது.
