LATEST NEWS
BREAKING: பள்ளி பேருந்து மீது லாரி மோதியது.. 15 மாணவர்கள் படுகாயம்..!!
கரூர் அருகே தனியார் பள்ளி பேருந்து மீது சரக்கு லாரி மோதிய கோர விபத்தில் 15 பள்ளி மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். கரூர் மாவட்டம் தரகம்பட்டி பகுதியில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த கடுமையான மோதலின் தாக்கத்தால், பேருந்தில் பயணம் செய்த இரண்டு மாணவிகளுக்குக் கால் முறிவு ஏற்பட்டுள்ளது.
விபத்து நடந்த உடனேயே அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து, லேசான மற்றும் சிறு காயமடைந்த மற்ற 13 மாணவர்களைப் பத்திரமாக மீட்டனர். காயமடைந்த 15 மாணவர்களும் உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
