திடீரென நடுரோட்டில் பற்றி எரிந்த ஸ்கூட்டர்… டிக்கிக்குள் இருந்த போனும் சாம்பல்… மயிரிழையில் உயிர் தப்பிய ஆசிரியர்… வைரலாகும் பகீர் விபத்து..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

திடீரென நடுரோட்டில் பற்றி எரிந்த ஸ்கூட்டர்… டிக்கிக்குள் இருந்த போனும் சாம்பல்… மயிரிழையில் உயிர் தப்பிய ஆசிரியர்… வைரலாகும் பகீர் விபத்து..!!

Published

on

ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டத்தில் குர்தியா மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த ஹீரோ ஸ்கூட்டர் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தீ விபத்தில் ஸ்கூட்டர் மற்றும் அதன் உள்ளே வைக்கப்பட்டிருந்த மொபைல் போன் ஆகிய அனைத்தும் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.

பன்வாரி லால் சர்மா என்ற பள்ளி ஆசிரியர், குர்தியா பள்ளியில் தனது பணியை முடித்துவிட்டு ஸ்கூட்டரில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டரில் ஏதோ ஒரு காரணத்தால் திடீரென தீப்பொறி ஏற்பட்டுள்ளது. இதை உடனடியாகக் கவனித்த ஆசிரியர், சமயோசிதமாக வாகனத்தை ஓரங்கட்டிவிட்டு கீழே குதித்ததால் எவ்வித காயமுமின்றி நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.

Advertisement

இருப்பினும், ஸ்கூட்டரின் டிக்கிக்குள் வைக்கப்பட்டிருந்த அவரது மதிப்புமிக்க மொபைல் போனும் தீயில் கருகி நாசமானது. ஸ்கூட்டர் கொழுந்துவிட்டு எரிவதைப் பார்த்த உள்ளூர் பொதுமக்கள் உடனடியாக விரைந்து வந்து தண்ணீரை ஊற்றித் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in