LATEST NEWS
CM சந்திரபாபு திறந்துவைத்த வார்டில் கொடூரம்..! இயங்காத மானிட்டர்களால் துடிதுடித்து இறந்த ஒரு வயது குழந்தை.. அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட மக்கள்..!!
ஆந்திரப் பிரதேச மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள என்.டி.ஆர் அரசு மருத்துவமனையில், மருத்துவர்களின் அலட்சியம் மற்றும் மருத்துவக் கருவிகள் இயங்காத காரணத்தால் ஒரு வயதுக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவால் சமீபத்தில் காணொளி வாயிலாகத் திறந்து வைக்கப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவில் இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது.
தேகடா கிராமத்தைச் சேர்ந்த நனுபில்லி பரமேஸ்வரி – சுகுணா தம்பதியினரின் 12 மாதங்களேயான இரண்டாவது பெண் குழந்தை, உடல்நலக் குறைவு காரணமாக இந்த அவசரச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டது. ஆனால், அங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவு கண்காணிப்புத் திரைகள் (Monitors) வேலை செய்யாததால், குழந்தையின் உடல்நிலை மோசமடைவதை மருத்துவர்களால் சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியாமல் போயுள்ளது. இதன் காரணமாக அந்தக் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
அரசின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்ததாகக் குற்றம் சாட்டி, பெற்றோரும் கிராம மக்களும் என்.டி.ஆர் மருத்துவமனை வளாகத்தை முற்றுகையிட்டு விடிய விடியத் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில்தான் முதலமைச்சரால் திறக்கப்பட்ட ஒரு புதிய உயர்தரப் பிரிவில் அடிப்படை வசதிகள் கூடச் சரியாக இல்லாததே இந்த மரணத்திற்குத் தள்ளியதாகப் போராட்டக்காரர்கள் ஆவேசம் தெரிவித்துள்ளனர்.
