LATEST NEWS
“2030-க்குள் மனித குலம் அழியும்” AI ஆல் ஆபத்து… ஆந்த்ரோபிக் ஆய்வாளர் பதவியை ராஜினாமா செய்து வெளியிட்ட திடுக்கிடும் எச்சரிக்கை… ஒட்டுமொத்த தொழில்நுட்ப உலகே அதிர்ச்சி..!!
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியால் 2030-க்குள் மனிதகுலம் அழிய வாய்ப்புள்ளதாக ஆந்த்ரோபிக் மற்றும் ஓபன்ஏஐ நிறுவனங்களில் பணியாற்றிய 27 வயதான முன்னணி ஆய்வாளர் ஜேக்கப் காக்சன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு திடுக்கிடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். நிறுவனங்கள் மனித உயிர்களுடன் பேராபத்தான சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், தங்களை தாங்களே மேம்படுத்திக் கொள்ளும் ‘சூப்பர் இன்டலிஜென்ஸ்’ அமைப்புகளை உருவாக்கும் போட்டியில் தீவிரமாக இயங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மிக விரைவிலேயே மனித ஆற்றலை மிஞ்சும் இந்த அமைப்புகள், எதையும் ஹேக் செய்யவும், நிஜ உலக வளங்களைக் கைப்பற்றவும் கூடிய பேராற்றலைப் பெறும் திறன் கொண்டவை என அவர் எச்சரித்துள்ளார்.
ஆந்த்ரோபிக் நிறுவனம் இந்த ஆபத்துகளை அறிந்திருந்தாலும், போட்டியில் பின் தங்கிவிடக் கூடாது என்ற பயம் காரணமாகவே ஆபத்தான வேகத்தில் தொடர்ந்து இயங்கி வருவதாக ஜேக்கப் காக்சன் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் ஓபன்ஏஐ நிறுவனத்தில் இதன் நாகரிக ஆபத்துகள் குறித்த முழுமையான விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை என்றும் அவர் சாடியுள்ளார். இத்துறை சார்ந்த பல முக்கியத் தலைவர்களும் மூத்த ஆய்வாளர்களும் கூட இந்த தசாப்தத்தின் (2030) இறுதிக்குள் மனித சமூகம் இதனால் அழிந்துவிடும் என்பதைத் தனிப்பட்ட முறையில் நம்புவதாகவும் அவர் தனது பதிவில் வெளிப்படுத்தியுள்ளார்.
காக்சனின் குற்றச்சாட்டுகளை ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் ஈவான் ஹூபிங்கர் உறுதிப்படுத்தியுள்ளார். AI-ஆல் பேரழிவு ஏற்பட 10%-க்கும் மேல் வாய்ப்புள்ளதாகக் கூறிய அவர், இதற்கான பாதுகாப்புத் திட்டங்கள் இன்னும் முழுமையாக இல்லை என்றார்.
