“போர் மேகம் சூழ்ந்தது” – அமெரிக்காவின் அதிநவீன உளவு நீர்மூழ்கியைக் கைப்பற்றிய ஈரான்.. வானிலேயே சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க ட்ரோன் – உலக அளவில் உச்சகட்ட பதற்ற வீடியோ..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“போர் மேகம் சூழ்ந்தது” – அமெரிக்காவின் அதிநவீன உளவு நீர்மூழ்கியைக் கைப்பற்றிய ஈரான்.. வானிலேயே சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க ட்ரோன் – உலக அளவில் உச்சகட்ட பதற்ற வீடியோ..!

Published

on

ஹார்முஸ் ஜலசந்தியில் உளவுப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ராணுவத்தின் அதிநவீன ஆளில்லா உளவு நீர்மூழ்கிக் கப்பலை ஈரான் ராணுவம் சுற்றிவளைக் கைக் கொண்டுள்ள சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை , ‘டைவ் எல்டி’ என்ற அந்த நீர்மூழ்கிக் கப்பலைக் கைப்பற்றியதோடு, அது தொடர்பான வீடியோ ஆதாரத்தையும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த நீர்மூழ்கியானது கடலின் மேற்பரப்பிற்கு வரமால் 10 நாட்கள் வரை தொடர்ந்து இயங்கும் திறன் கொண்டது என்றும், 6,000 மீட்டர் ஆழம் வரை செல்லக்கூடியது என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் ஈரானின் 5 கச்சா எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா ஏவுகணை வீசி அழித்ததற்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஹார்முஸ் ஜலசந்திக்கு மேல் பறந்த அமெரிக்காவின் அதிநவீன எம்க்யூ-9 ரீப்பர் ட்ரோன் ஒன்றையும் தங்களது வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதற்குப் பதில் அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்கா, தங்களது ஆளில்லா விமானம் ஒன்று ஒரு நாளுக்கு முன்பு செயலிழந்துவிட்டதை ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால், அதில் ரகசிய சோனார் அல்லது ரேடார் கருவிகள் எதுவும் இல்லை என மறுப்புத் தெரிவித்துள்ளது.

Advertisement

இந்த உச்சகட்ட பதற்றத்திற்கு மத்தியில் கருத்து தெரிவித்துள்ள ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஸ்கி, தங்களது நாடு எப்போதுமே போரை விரும்புவதில்லை என்றும், ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் முழுமையாக வருந்தும் வரை தங்களது வீரியமிக்க எதிர்ப்புத் தொடரும் என்றும் எக்ஸ் (X) தளத்தில் திட்டவட்டமாகப் பதிவிட்டுள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் இந்த ராணுவ மோதல்கள் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை அதிகரித்துள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in