“குறுக்க இந்த கௌசிக் வந்தா.?” பிற நாட்டு கப்பல்களை தாக்கிய ஈரானுக்கே ஆப்பு.. சோமாலிய கொள்ளையர்கள் செய்த பகீர் காரியம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“குறுக்க இந்த கௌசிக் வந்தா.?” பிற நாட்டு கப்பல்களை தாக்கிய ஈரானுக்கே ஆப்பு.. சோமாலிய கொள்ளையர்கள் செய்த பகீர் காரியம்..!!

Published

on

சோமாலியாவின் வடகிழக்குப் பகுதியில் 21 ஈரானியப் பணியாளர்கள் மற்றும் 2 சோமாலியப் பாதுகாப்புப் படையினர் உட்பட 23 பேருடன் பயணித்த ‘அஜினி’ என்ற ஈரானிய மீன்பிடி கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். கடந்த அக்டோபர் 29-ம் தேதி பந்தர் பைலா மற்றும் ஹபுனா ஆகிய கடலோர நகரங்களுக்கு இடையே பயணித்துக் கொண்டிருந்த போது, 8 முதல் 12 கடற்கொள்ளையர்கள் இந்த கப்பலை வழிமறித்துக் கடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கடத்தல் சம்பவத்திற்குப் பிறகு கப்பலில் இருந்த பணியாளர்கள் குறித்த எந்தவொரு தற்போதைய தகவலும் கிடைக்கவில்லை என்று பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், கடத்தப்பட்ட இந்தக் கப்பல் தற்போது சர்வதேச வர்த்தகக் கப்பல்கள் முக்கியமாகப் பயணிக்கும் கடல் பாதைகளை நோக்கி நகர்ந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதனால், மற்ற சர்வதேச வர்த்தகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான ஒரு தளமாக இந்தக் கப்பலை கடற்கொள்ளையர்கள் பயன்படுத்தக்கூடும் என்று இந்தியப் பெருங்கடல் கடல்சார் பாதுகாப்பு மையம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் பிற நாட்டு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் வேளையில், தற்பொழுது ஈரானின் சொந்தக் கப்பலே கடத்தப்பட்டிருப்பது கடல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in