LATEST NEWS
அமேசானில் வருடத்திற்கு ரூ.46 லட்சம் பேக்கேஜ்… “எனக்கு இந்த பணத்தை விட நாட்டு சேவை தான் முக்கியம்…” வேலையை உதறித் தள்ளிவிட்டு ராணுவ அதிகாரியான இளைஞர்..! பின்னணியில் இருக்கும் மாஸ் கதை..!!
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர், அமேசான் நிறுவனத்தில் மாதம் சுமார் 4 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்கி கொண்டிருந்த நிலையில், தற்போது அந்த வேலையை விட்டுவிட்டு இந்திய ராணுவ பணியில் சேர்ந்துள்ளார். உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவை பூர்வீகமாகக் கொண்ட 27 வயதான திவாரி, தனது பள்ளிப்படிப்பை கேந்திரியா வித்யாலயாவில் முடித்துவிட்டு, பின்னர் சண்டிகரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். இதையடுத்து வருடத்திற்கு சுமார் 46 லட்சம் ரூபாய் சம்பளத்தில் அமேசான் கிளவுட் நிறுவனத்தில் அவர் பொறியாளராக பணியில் சேர்ந்தார்.
திவாரியின் தந்தையான ராஜ் குமார் திவாரி, இந்திய ராணுவத்தில் 36 ஆண்டுகள் பணியாற்றினார். சிறுவயதில் இருந்தே தனது தந்தையை பார்த்து வளர்ந்த திவாரிக்கு, ஆயுத படையில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. திவாரியை பொறுத்தவரை அதிக வருமானம் தரும் ஒரு பணியை விட, ஒழுக்கம், தியாகம் மற்றும் சேவை ஆகியவற்றில் ஈடுபடும் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணமே அதிகமாக இருந்துள்ளது. இதன் காரணமாக இவர் தனது பொறியாளர் வேலையை விட்டுவிட்டு, விண்வெளி துறையின் முன்னணி நிறுவனமான ஏர்பஸ்ஸால்-இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் இந்திய ராணுவத்திற்கு அதிகாரியாக சேர்வதற்காக, திவாரி மேற்கொண்ட முயற்சிகள் முதலில் தோல்வியடைந்தன.
இறுதியில் பீகார் மாநிலம் கயாவில் உள்ள அதிகாரிகள் பயிற்சி மையத்தில், திவாரி ராணுவ அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, மூத்த துணை அதிகாரியாக பணி நியமனம் செய்யப்பட்டார். திவாரியை பொறுத்தவரையில் வெற்றி என்பது எப்போதுமே சம்பளத்தின் அளவை கொண்டு அளவிடப்படாமல், உண்மையிலேயே தனது மனது விரும்பும் ஒன்றை துரத்திச் செல்வதில் தான் இருக்கிறது என்பதை உணர்த்துவதாக உள்ளது.
