“நான் இறந்தால் இவர்கள்தான் காரணம்!”.. தவெக நிர்வாகி வெளியிட்ட அதிரவைக்கும் ஆடியோ… தருமபுரியில் வெடித்த பூகம்பம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நான் இறந்தால் இவர்கள்தான் காரணம்!”.. தவெக நிர்வாகி வெளியிட்ட அதிரவைக்கும் ஆடியோ… தருமபுரியில் வெடித்த பூகம்பம்..!!

Published

on

தமிழக வெற்றிக் கழகத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது தருமபுரி விவகாரம். பாப்பாரப்பட்டி நகர செயலாளர் ரமேஷ் வெளியிட்டுள்ள மரண பயம் கலந்த ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகள் ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் உலுக்கியெடுத்துள்ளது. எனக்கு ஏதேனும் நேர்ந்தால், அதற்கு என் சொந்தக் கட்சியைச் சேர்ந்த இந்த நிர்வாகிகள் தான் காரணம் என அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருப்பது, தவெக கூடாரத்திற்குள் நடக்கும் உள்விவகாரங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. தவெகவின் உட்கட்சி நிகழ்ச்சி மற்றும் ஆலோசனைக் கூட்டங்களுக்குக் கூட தமக்கு முறையான அழைப்பு விடுக்கப்படுவதில்லை என்றும், கட்சியில் திட்டமிட்டே தான் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர் அந்தப் பதிவில் வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும், மன உளைச்சலில் இருக்கும் தனக்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கு தவெகவைச் சேர்ந்த குறிப்பிட்ட சில நிர்வாகிகள் தான் முழுப் பொறுப்பு எனக் கூறி அவர்களின் பெயர்களையும் அவர் வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தவெக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு முன்னதாக ரமேஷின் தாயாரும் இதே போன்றதொரு குற்றச்சாட்டை அக்கட்சியின் நிர்வாகிகள் மீது முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. ரமேஷின் குடும்பத்தினர் மற்றும் அவர் தரப்பில் இருந்து தொடர்ந்து கட்சியின் உள்ளூர் நிர்வாகிகளுக்கு எதிராக அடுக்கடுக்கான புகார்கள் எழுப்பப்பட்டு வருவதால், தருமபுரி மாவட்ட தவெக நிர்வாகத்திற்குள் நிலவும் உட்கட்சிப் பூசல் மற்றும் மோதல்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்து பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in