LATEST NEWS
“அங்கப் போகாதீங்க.. சீனியர் மரியாதை இல்ல!”.. அதிமுக EX அமைச்சர்களுக்கு திடீர் வார்னிங்.. கடம்பூர் ராஜுவின் ‘யூ-டர்ன்’ புலம்பல்.. தமிழக அரசியலில் அடுத்த பூகம்பம்..!!
அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முடிவு செய்திருந்த சில முன்னாள் அமைச்சர்களை, சமீபத்தில் தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு எச்சரித்து அலர்ட் செய்துள்ளதாகத் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. தவெகவில் இணைந்த பிறகு தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை அவர் அதிமுக புள்ளிகளிடம் பகிர்ந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, புதிய கட்சியில் சீனியர் என்ற மரியாதையே இல்லை என்றும், முன்னாள் அமைச்சர்களாக இருந்தும் தங்களைச் சந்திப்பதற்குக் கூட உரிய நேரம் ஒதுக்கப்படுவதில்லை என்றும் அவர் அதிமுக நிர்வாகிகளிடம் புலம்பி அழுதுள்ளதாகத் தெரிகிறது.
கடம்பூர் ராஜுவின் இந்தத் திடீர் புலம்பல் மற்றும் எச்சரிக்கையைக் கேட்டதும், அதிமுகவிலிருந்து வெளியேறி தவெகவிற்குச் செல்லத் திட்டமிட்டிருந்த முக்கியப் புள்ளிகள் அதிர்ச்சியடைந்து தற்போது அமைதியாகிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அதிமுகவில் தங்களுக்குக் கிடைக்கும் முக்கியத்துவமும் மரியாதையும் அங்குக் கிடைக்காது என்பதை உணர்ந்துகொண்டதால், கட்சி மாறும் முடிவை அவர்கள் தற்காலிகமாகக் கைவிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.
