LATEST NEWS
“என்னது!.. ‘ஜன நாயகன’ பட ரிலீஸுக்கு அரசு விடுமுறையா?.. அமைச்சரைக் கிழித்துத் தொங்கவிட்ட ஆர்.பி. உதயகுமார்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு..!!
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்பட வெளியீட்டு நாளுக்குத் தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் ரிலீஸை ஒரு திருவிழா போலக் கொண்டாட வேண்டும் என்று அமைச்சர் பேசியதைக் குறிப்பிட்டுச் சாடிய ஆர்.பி. உதயகுமார், இதையெல்லாம் பார்க்கும்போது இந்தத் தமிழ்நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது என்ற கவலையோடு நாம் பொறுத்திருக்க வேண்டியுள்ளது எனத் தனது ஆதங்கத்தைப் பதிவிட்டுள்ளார்.
திரைப்பட வெளியீட்டிற்கு ஆளுங்கட்சி அமைச்சர் ஒருவரே இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துப் பேசுவது பொதுமக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சியான அதிமுக இதனைத் தங்களின் அரசியல் விமர்சன ஆயுதமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. மக்கள் நலப் பணிகளை விடத் திரைப்படக் கொண்டாட்டங்களுக்குத் தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறதா என்ற தொனியில் ஆர்.பி. உதயகுமார் எழுப்பியுள்ள இந்தக் கேள்வி, தற்போது சமூக வலைத்தளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
