LATEST NEWS
அய்யோ கொடுமையே.. கல்லூரி வாசலிலேயே காத்திருந்த எமன்..! 19 வயது மாணவி மீது ஏறி இறங்கிய பிக்கப் கிரேன்.. அலறியடித்து ஓடிய மக்கள்… பதறவைக்கும் சிசிடிவி வீடியோ..!!
அகமதாபாத்தின் கோதா பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்த 19 வயது மாணவி மீது பிக்கப் கிரேன் மோதி ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொடூர விபத்தின் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. விபத்தை ஏற்படுத்திய கிரேன் ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து உடனடியாகத் தப்பி ஓடிவிட்டார்.
உயிரிழந்த மாணவி பிரேர்ணா நீனாமா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் சில்வர் ஓக் பல்கலைக்கழகத்தில் முதலாண்டு பி.எஸ்சி படித்து வந்தார். காலை 11:30 மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்டு கல்லூரிக்கு நடந்து சென்றபோது, பல்கலைக்கழக வளாகத்திலிருந்து வெறும் 200 மீட்டர் தொலைவில் காலை 11:55 மணியளவில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சாலையின் இடதுபுறமாக நடந்து சென்ற மாணவியின் பின்னால் வந்த பிக்கப் கிரேன் வர் மீது மோதி ஏறியது.
விபத்திற்குப் பின் ஓட்டுநர் அருண் நிஷாத் வாகனத்தை விட்டுவிட்டுத் தப்பியோடினார். உள்ளூர் மக்கள் உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்ததுடன், தப்பியோடிய ஓட்டுநரைத் தேடி அருகில் உள்ள சோலா பகுதியில் பிடித்துக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதனிடையே, அப்பகுதியில் சரியான நடைபாதை இல்லாததால் பாதசாரிகள் ஆபத்தான முறையில் சாலையில் நடக்க வேண்டிய சூழல் உள்ளதாகவும், இதுவே விபத்திற்குக் காரணமா என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது குறித்துக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
