“குடும்பத் தலைவிகளுக்கு ஹாப்பி நியூஸ்.. மகளிர் உரிமைத் தொகை.. வெளியான புதிய அப்டேட்… அமைச்சர் அளித்த அசத்தல் அறிவிப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“குடும்பத் தலைவிகளுக்கு ஹாப்பி நியூஸ்.. மகளிர் உரிமைத் தொகை.. வெளியான புதிய அப்டேட்… அமைச்சர் அளித்த அசத்தல் அறிவிப்பு..!!

Published

on

மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என்று பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்த பெண்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்த அமைச்சர் நிர்மல்குமார், தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் அல்லாமல் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, தொகை உயர்வு உடனடியாக அமலுக்கு வரும் என்று நம்பிக்கையுடன் இருந்த லட்சக்கணக்கான குடும்பத் தலைவிகளுக்குப் பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இதுவரை சேராத புதிய பயன்பெற விரும்புபவர்களுக்கு, தற்போது வழங்கப்படும் ரூ.1,000 பெற விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிய பயனாளிகள் இணையம் வழியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என்றும், அல்லது ஒவ்வொரு திங்கள்கிழமையும் நடைபெறும் மக்கள் குறைதீர்ப்பு முகாம்களில் நேரடியாகச் சென்று மனு அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in