விசில் எடுத்து ஊதுங்க தண்ணி, கரண்ட் வந்திரும்… என் தம்பி காட்டின படத்துக்கு முன்னாடி என் படம் எடுபடல… சீமான் கடும் தாக்கு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

விசில் எடுத்து ஊதுங்க தண்ணி, கரண்ட் வந்திரும்… என் தம்பி காட்டின படத்துக்கு முன்னாடி என் படம் எடுபடல… சீமான் கடும் தாக்கு..!!

Published

on

தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமையிலான அரசையும் அதன் தேர்தல் சின்னத்தையும் மிகக் கடுமையான முறையில் விமர்சித்துப் பேசியுள்ளார். தவெகவினர் இன்னும் தேர்தல் காலப் பரப்புரை உத்திகளிலேயே மூழ்கி இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

பிரச்சார மேடையில் பேசிய சீமான், “மின்சாரம் இல்லை என்றால் விசிலை எடுத்து ஊதுங்கள், மின்சாரம் வந்துவிடுமா? அல்லது தண்ணீர் இல்லை என்றால் விசிலை எடுத்து ஊதுங்கள், தண்ணீர் வந்துவிடுமா? இனியாவது மக்கள் இந்த விசிலை விட்டுவிட்டு, தங்களது வாழ்வாதாரமான விவசாயத்தைத் தொட வேண்டும்” என்று வலியுறுத்தினார். மேலும், சினிமா புகழை வைத்து அரசியல் செய்வதைச் சாடிய அவர், “என் தம்பி காட்டிய சினிமா படத்திற்கு முன்னால், எனது அரசியல் படம் எடுப்படவில்லை” என்றும் ஓப்பனாக ஒப்புக்கொண்டார்.

Advertisement

தொடர்ந்து தவெக அரசின் செயல்பாடுகளை விமர்சித்த சீமான், ஆட்சிக்கு வந்து இத்தனை மாதங்கள் ஆகியும் தவெக அரசு மக்கள் நலனுக்காக என்னென்ன திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது என்பதை விளக்க வேண்டும் என்று கூறினார். ஆனால், தவெக தலைவர் சொல்வதற்கு உருப்படியாக ஒன்றுமில்லாமல், இன்னும் ‘தவெக எதிர் திமுக’ என்ற தேர்தல் கால அரசியல் நாடகத்தையே பொதுக்கூட்டங்களில் பேசி வருவதாகச் சீமான் தனது உரையில் மிகக் காட்டமாகச் சாடினார்.


Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in