“கொளத்தூர் தொகுதியில் இடைத்தேர்தல் வைங்க” 25 நாள்களாக MLA-வ காணோம்.. சமூக வலைத்தளங்களில் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“கொளத்தூர் தொகுதியில் இடைத்தேர்தல் வைங்க” 25 நாள்களாக MLA-வ காணோம்.. சமூக வலைத்தளங்களில் பரபரப்பு..!!

Published

on

தவெக சட்டமன்ற உறுப்பினரான வி.எஸ்.பாபு கடந்த 25 நாட்க ளாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரும் விவகாரம், தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் செயல்பாடு மற்றும் மௌனம் ஆகியவை பொதுமக்களிடையேயும் அரசியல் கட்சிகளிடையேயும் பல்வேறு கடுமையான விமர்சனங்களை எழுப்பி வருகின்றன.

ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாகத் தவெக அரசை விமர்சித்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , “தங்களை எப்போதும் வெளிப்படைத்தன்மையான அரசு என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் தவெக, சொந்தக் கட்சி எம்.எல்.ஏ-வின் உடல்நிலை குறித்த உண்மைத் தகவல்களைத் தெரிவிக்காமல் மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வருகிறது” என்று குற்றம் சாட்டியிருந்தது. மக்கள் பிரதிநிதியின் நிலை குறித்து அரசிடம் இருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வராதது சந்தேகங்களை வலுப்பதாக அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

Advertisement

இந்நிலையில், இந்த சர்ச்சை தற்பொழுது சமூக ஊடகங்களிலும் பூதாகரமாக வெடித்துள்ளது. எக்ஸ் மற்றும் முகநூல் பக்கங்களில் பலரும் “கொளத்தூர் எம்.எல்.ஏ-வை காணவில்லை; தொகுதிப் பணிகள் முடங்கியுள்ளதால் உடனடியாக அங்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும்” என்று டிசைன் டிசைனாகப் பதிவிட்டு வருகின்றனர். சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வரும் இந்த விவகாரம் தவெக அரசுக்குப் பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in