LATEST NEWS
இது என்ன கொடுமை..? “இங்க அமுக்கு.. அங்க அமுக்கு…” சின்னப் பாப்பாவிடம் அங்கன்வாடி ஊழியர் செய்த காரியம்.. கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
மத்தியப் பிரதேச மாநிலம் சின்த்வாரா மாவட்டம், பராசியா தாலுகா, சாந்தாமேட்டா பகுதி 12-வது வார்டு பகுதியில் அமைந்துள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இந்த அங்கன்வாடி மையத்தின் உதவியாளர் ஒருவர் தரையில் படுத்துக் கொண்டிருக்க, ஒரு சிறுமி அவரது கால்கள் மீது நின்று மிதித்து மசாஜ் செய்துவிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், அந்தச் சிறுமியிடம் எந்த இடத்தில் அழுத்தி மிதிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்துவது அந்த வீடியோவில் கேட்கிறது. இந்தச் சம்பவம் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் மேற்பார்வை குறித்துப் பல கேள்விகளையும் கவலைகளையும் எழுப்பியுள்ளது.
இதற்கு முன்னரும் மத்தியப் பிரதேசத்தின் பிற பகுதிகளில் பள்ளி மாணவர்கள் மற்றும் குழந்தைகளிடம் இதுபோன்ற முறையற்ற வேலைகள் வாங்கப்பட்ட சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. போபால் காந்திநகரில் உள்ள அரசு மகாத்மா காந்தி மேல்நிலைப் பள்ளியில், ஆசிரியர் ஒருவர் நாற்காலியில் அமர்ந்து கொண்டு, மற்றொரு நாற்காலியில் காலை நீட்டி நான்காம் வகுப்பு மாணவியைக் கொண்டு கால் மசாஜ் செய்யச் சொன்ன வீடியோ வைரலானது. இருப்பினும், பள்ளியின் நுழைவு வாயில் அருகே உடைந்த டைல்ஸ் பள்ளத்தில் கால் சுளுக்கிவிட்டதாகவும், வலியைக் குறைக்கவே அம்மாணவி தன் கால்களைப் பிடித்துவிட்டதாகவும் அந்த ஆசிரியர் விளக்கமளித்தார்.
இதேபோன்று, சத்தர்பூர் மாவட்டம் பாம்னூர் கிளஸ்டருக்கு உட்பட்ட ஹைதராபாத் கிராமத்து அரசு நடுநிலைப் பள்ளியில், பகவான்தாஸ் அகிர்வார் என்ற ஆசிரியர் பள்ளி வளாகத்திலேயே மது அருந்துவதாகவும், சிறுவர்களை விட்டு மதுபானம் வாங்கி வரச் சொல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மாணவர்கள் மது பாட்டிலைச் சுமந்து கொண்டு ஆசிரியரைக் குறிப்பிடும் வீடியோவும், அதை எடுத்தவரை ஆசிரியரின் மனைவி மிரட்டும் ஆடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவங்கள் குறித்துப் புகார்கள் வரப்பெற்றால் உரிய விசாரணை நடத்தப்பட்டுத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் கல்வி அதிகாரி பி.கே. ராய்க்வார் தெரிவித்துள்ளார்.
