LATEST NEWS
BREAKING: ஸ்டாலினுக்கு பரப்புரை செய்ய தடை..? தேர்தல் ஆணையத்தில் தவெக அதிரடிப் புகார்..!!
தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறியதாகத் மு.க.ஸ்டாலின் மீது இந்தியத் தேர்தல் ஆணையத்தில் தவெக வழக்கறிஞர் அணி சார்பில் புகார் அளிக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாராபுரம் தொகுதியின் தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவகேலி செய்து பேசியதற்காக, ஸ்டாலின் தேர்தல் பரப்புரை செய்யத் தடை விதிக்க வேண்டும் என்றும் தவெக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று தாராபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஸ்டாலின், தவெக வேட்பாளர் சத்யபாமாவின் உடலமைப்பு குறித்துப் பேசியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவரின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளதோடு, பல்வேறு தரப்பிலும் கடும் விமர்சனங்களை எதிர்நோக்கி வருகிறது.
