CRIME
FLASH: பட்டப்பகலில் ஊராட்சிமன்ற தலைவர் கல்லால் அடித்துக்கொலை… நெல்லையில் பயங்கரம்..!
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் ஒன்றியம் கண்ணநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் மகாராஜன், பொதுமக்கள் முன்னிலையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கண்ணநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட வள்ளியூர் பகுதியில் நீண்ட நாட்களாகக் குடிநீர் விநியோகம் சீராக இல்லாததால், அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சித் தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சமாதானப் பேச்சின் போது, கூட்டத்தில் இருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பயங்கரமான முறையில் கல் எறிந்ததில், ஊராட்சித் தலைவர் மகாராஜன் சம்பவ இடத்திலேயே நிலைகுலைந்து சரிந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
பொதுமக்களின் குறைகளைக் கேட்கச் சென்ற ஒரு மக்கள் பிரதிநிதி பட்டப்பகலில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம், ஒட்டுமொத்த நெல்லை மாவட்டத்திலும், குறிப்பாக வள்ளியூர் பகுதியிலும் கடுமையான பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக விரைந்து வந்து, உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், தப்பியோடிய நபரைத் தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
